வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம் !
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வவுணதீவு பொலிஸ் பிரிவின் முள்ளாமுனை பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அனாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த வவுணதீவு பொலிஸார் காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.