உலகம்

வளி மாசடைவை குறைக்க மாற்றுவழிஇந்திய தலைநகர் டெல்லியியில் ஏற்பட்டுள்ள  வளி மாசடைவையடுத்து, மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு இலக்க அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் வளி மாசடைவைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு இலக்க அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு முதன் முதலில்  அமுல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் வளி மாசடைவு கணிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இருசக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், பெண்கள் செலுத்தும் கார்கள், பெண்களை அழைத்துச் செல்லும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு இந்த சட்டம் விதிவிளக்காக அமைந்துள்ளது.

ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு இலக்க அடிப்படையில் வாகனங்களை  வெலுத்தும் சட்டத்தை மீறுபவர்களுக்கு, 4,000 ரூபாய் (இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.