விளையாட்டு

வலுவான நிலையில் சிம்பாப்வே ; நான்காம் நாள் இன்றுஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வேஅணி 175 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியுஸ் 64 ஓட்டங்களையும்இ திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களையும், ஓசத பெர்ணான்டோ 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

சிம்பாவ்பே அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சிக்கந்தர் ராஷா 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடிஇ 406 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக வில்லியம்ஸ் 107 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராஷா 72 ஓட்டங்களையும் பிரன்டன் டெய்லர் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுக்களையும் தனஞ்ஜய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய சிம்பாப்வே அணி, 113 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்ற நிலையில் சிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்து நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.