இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கல்முனையில் பேரணி !

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், அமைதி பேரணி இன்று காலை கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிறைவு பெற்றது.

இதன் போது, சர்வ மத தலைவர்களால் மகஜர் ஒன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.