Breaking News

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தால் முல்லைத்தீவில்  மனிதாபிமான பணி !

வன்னி செய்தியாளர்

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தால் வறுமை கோட்டுக்குள் வாழும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கும் மனிதாபிமான பணி  முன்னெடுக்கப்பட்டுள்ளது .

கொரோனா வைரஸ் தொற்றின்  எதிரொலியால் முழுநாடும் ஊரடங்கு நிலையால் முடங்கி போயுள்ள நிலையில் தினக்கூலிகளாக நாளாந்தம் உழைத்து உண்ணும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் மிகவும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த வறுமை நிலையை போக்கும் நோக்கோடு முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தால் இந்த மனிதாபிமான நிவாரண பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இதன் முதற் கட்டமாக இன்றையதினம்  (29) கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 27  கிராம அலுவலர்  பிரிவுகளுகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கான வாழ்வாதர உதவிகள் வழங்கு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்த நிவாரண பணியை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் திருமதி உமாமகள் ஆரம்பித்து வைத்தார் . நிவாரண பொதிகள் அடங்கிய வாகனம் வீடு வீடாக சென்று பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டமையும்  குறிப்பிடத்தக்கது .