இலங்கை

வறட்சியுடன் மின்வெட்டும் தொடர்கிறது – நீர்த்தேக்கங்களில் நீரும் வற்றுகிறது !

மலையகத்தில் தொடரும் வறட்சியின் காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் மின்சாரத்தினை இடையூறின்றி வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் தொடரும் கடும் வரட்சியின் காரணமாக காசல்ரீ , மவுசாகலை,கொத்மலை
ஆகிய நீர்தேக்கங்களின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைவடைவதனால்
மின் பயனாளர்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்க முடியாத நிலை உள்ளதாக இலங்கை மின்சாரசபையினர் தெரிவிகின்றனர்.

கொத்மலை நீர்தேக்கத்தில் 1979ம் ஆண்டு நீரினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் ரஜமகாவிகாரை திஸ்பனவிகாரை ஆகிய விகாரைகள்
கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து காட்சியளிப்பதோடு இந்த காலப்பகுதியில்
சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. மக்கள் குறித்த
விகாரகைளை வழிபட்டு செல்லுகின்றமையையும் காணக் கூடியதாகவுள்ளது.

(படங்களும் செய்தியும் – நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் )