Breaking News

“வரலாறு மன்னிக்காது” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரித்தார் சிவசக்தி ஆனந்தன் எம்பி

 

“கலப்பு விசாரணைக்கு கூட தயாரில்லை என்று கூறிய அரசு அண்மைய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உலக நாடுகள் இங்கே வந்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.அப்படியானால் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை இங்கு வந்து நடத்த ஏன் அனுமதியளிக்க முடியாது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். புதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது.

அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு இன்று கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை முன்வைத்து ,அதனை செய்யாவிட்டால் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்க முடிவெடுக்கலாம்.இதனை செய்யாவிட்டால் வரலாறு மன்னிக்காது..”

இன்று பாராளுமன்றத்தில் பேசும்போது இப்படிச் சொன்னார் சிவசக்தி ஆனந்தன் எம்பி