இலங்கை

” வரலாறில் இல்லாத வகையில் பௌத்த மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு” – சஜித் அறிவிப்பு

 

” வரலாறில் இல்லாத வகையில் பௌத்த சாசன மேம்பாட்டிற்கு நான் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளேன்.பௌத்தசாசன அமைச்சு ,மத்திய கலாசார நிதியம் ,கலாசார அமைச்சு பிரதமரின் அலுவலகம் என்பவற்றின் ஊடாக நான் இதற்காக பெரும் நிதி ஒதுக்கீடு செய்வேன்.நாடு முழுவதும் 1125 விகாரைகள் கட்டப்பட்டு ,விகாரை அறநெறிப் பாடசாலை ,விகாரை மண்டபங்கள் அமைக்கப்படும்.நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நான் பாதுகாப்பு புலனாய்வுத் துறையை மேம்படுத்துவேன்.அதில் அரசியல் கலக்க இடமளிக்க மாட்டேன்.தேசிய பாதுகாப்பை நான் உறுதிப்படுவேன்”

குருநாகல் கட்டுக்கம்பளையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உரை .