இலங்கை

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹக்கீம் விஜயம் !

 

குருநாகல் மாவட்டத்தில் இனவாதக் குழுக்களின் தாக்குதலுக்குள்ளான ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய, குளியாப்பிட்டிய, மடிகே, அனுக்கண, எஹட்டுமுல்ல, பண்டாரகொஸ்வத்த, தொஹரகொடுவ போன்ற பிரதேசங்களுக்கு இன்று (14) விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டதுடன் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலிசாஹிர் மெளலானா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்சாவும் கலந்துகொண்டுள்ளனர்.