இலங்கை

வன்முறைகளை தமிழர் எதிர்த்திருந்தால் பேரவலம் ஏற்பட்டிருக்காது – டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவிப்பு !

 

– யாழ்ப்பாண செய்தியாளர் –

நாட்டில் இஸ்லாம் மதத்தின் பெயரால் வன்முறை ஏற்பட்டிருக்கும் போது குறித்த மத தலைவர்கள் மற்றும் அந்த சமூகம் எதிர்க்கின்றனரோ இதேபோல இலங்கை-இந்திய ஒப்பந்தத்த்தின் பின்னர் தமிழ் இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் அன்றைக்கே குரல் கொடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்க வேண்டியிருக்காது என ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நாட்டில் அண்மையில் இஸ்லாம் மதத்தின் பெயரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படடன.எனினும் அந்த சந்தர்ப்பத்தில் விழித்தெழுந்த முஸ்லீம் சமூகம் மற்றும் அதன் மக்கள் பிரதிநிதிகள் வன்முறையில் ஈடுபடடவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.இது வரவேற்கத்தக்க விடயம்.இதேபோல தமிழ் சமூகத்தினரை பொறுத்தவரையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இனத்தின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக அன்றைக்கே குரல் கொடுத்திருந்தால் தமிழ் சமூகம் முள்ளிவாய்க்கால் வரை சென்று இவ்வளவு அழிவினை சந்தித்திருக்காது.

தமிழ் சமூகம் அழிவடைய,முதுகெலும்பு இல்லாது இருக்க முழுக் காரணம் தமிழ்த் தலைமைகளே.அவர்கள் தங்களின் சுயநலத்துக்கும்,வசதிக்கும் உசுப்பேத்து அரசியலை செய்து இனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர்..

என்றார் அவர்