இலங்கை

” வனவள அமைச்சையே ஒழுங்காக செய்யாதவர் பொன்சேகா. ” – சட்டம் ,ஒழுங்கு அமைச்சர் பதவி கோரிக்கையை சீற்றத்துடன் நிராகரித்தார் மைத்ரி

” சரத் பொன்சேகாவுக்கு வனவள அமைச்சைக் கூட ஒழுங்காக செய்ய முடியவில்லை.இதில் சட்ட ஒழுங்கு அமைச்சை கொடுத்தால் நன்றாகத் தான் இருக்கும்.ஆடை அணிந்து கொண்டா இப்படியெல்லாம் உங்களால் கேட்க முடிகிறது ? ”

இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை பார்த்து கேள்வியெழுப்பியிருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க யோசனை செய்யுமாறும் தேவைப்படின் யாரவது ஒருவர் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து வெற்றிடத்தை ஏற்படுத்துவார்களென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்து பேசியபோது கேட்டது.

அப்போதே இப்படி எரிச்சலுடனும் கோபத்துடனும் அவர்களிடம் இப்படிக் கூறிய ஜனாதிபதி மேலும் கூறியிருப்பதாவது,

” சாகல ரத்னாயக்கவுக்கு இந்த அமைச்சை கொடுக்கச் சொன்னீர்கள் கொடுத்தேன். பின்னர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு கொடுக்கச் சொன்னீர்கள் கொடுத்தேன்.இருவரும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு பொலிஸ் திணைக்களத்தை கொண்டு சென்றனர். நான் சொன்ன பல விடயங்களை உதாசீனப்படுத்தினர்.இப்போது சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு கூறுகிறீர்கள். அவருக்கு வனவள அமைச்சையே ஒழுங்காக செய்துகொள்ள முடியாமல் போனது.இதில் இது தேவையா? பாதுகாப்பு உயரதிகாரிகள் பொன்சேகாவை விரும்பவில்லை .எனவே மீண்டும் இதனை நான் யாருக்கும் வழங்குவதாக இல்லை.”

என்று ஒரேயடியாகக் கூறிவிட்டாராம் ஜனாதிபதி. இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த அந்த அமைச்சர்கள் அமைதியாக வெளியேறிவிட்டதாக தகவல்