இலங்கை

வட்டவளையில் வேன் பள்ளத்தில் பாய்ந்தது – 10 பேர் காயம் !

மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியிலே இன்று காலை 5.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்

காலியில் மரணவீடொன்றுக்கு சென்று அட்டன் நோக்கி வந்த வேன் ஒன்றே பாதையை விட்டுவிலகி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பொன்றுக்கு அருகில் குடைசாய்ந்துள்ளது

வேனில் பயணித்தவர்களில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் காயமுற்று வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாரே விபத்துக்கான காரணமென தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணையை தொடர்கின்றனர்

(நோர்ட்டன் ப்ரிட்ஜ் நிருபர் )