இலங்கை

வடபகுதி ரயில் மேம்பாட்டிற்கு இந்திய நிதியுதவி !

 

இந்திய உதவிகள் சலுகை நிதியத்தின் கீழ் மஹோவிலிருந்து ஓமந்தை வரை 130 கி.மீ ரயில் பாதையை மேம்படுத்துவதற்கான 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் இந்திய ஐர்கொன் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் இலங்கை அரசுக்கிடையில் இன்று கையெழுத்தானது.

100 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக இந்த ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன.