Breaking News

“வடக்கை மேலும் அபிவிருத்தி செய்வேன்- என்னை நம்புங்கள்..” – யாழில் கோட்டாபய தெரிவிப்பு !

“நாட்டில் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள் என்னை நம்புங்கள். நான் சொன்னவற்றை நிறைவேற்றியுள்ளேன். தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி நான் உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன். உங்களது தலைவர்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தி செயற்படுகின்றனர். ஆனால் நான் உங்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுவேன். மஹிந்தவின் ஆட்சியில் தான் இங்கு அபிவிருத்தி நடந்தது. இராணுவ வசம் இருந்த காணிகளின் 90 வீதமான காணிகளை நாங்களே விடுவித்தோம் .எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து நான் டக்ளசுடன் பேசினேன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் , வேலைவாய்ப்பு , சிறந்த கல்விக்கு முக்கியத்துவமளித்துள்ளேன். உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல வழி செய்வேன்.தொழிநுட்ப , தொழிற்பயிற்சி கல்லூரிகளை ஏற்படுத்தும் வேலைத் திட்டம் என்னிடமுள்ளது. வேலைவாய்ப்புக்களை நாங்கள் வழங்க வேண்டும்.

நாங்கள் கைதான முன்னாள் புலிகள் இயக்க பிரமுகர்களை புனர்வாழ்வு கொடுத்து விடுவித்தோம் . பிரச்சினைகளை வைத்து வாழாமல் எதிர்காலத்தை பற்றி யோசித்து செயற்படுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சந்தேகம் அச்சமின்றி அனைத்து இனத்தினரும் ஒன்றாக செயற்படும் நாட்டை உருவாக்க வேண்டும். என்னில் நம்பிக்கை வையுங்கள். நான் பாதுகாப்பான தேசத்தை கட்டியெழுப்புவேன்..”

  • ”யாழ்ப்பாணத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு !”