இலங்கை

வடக்கு மாகாண கல்வியமைச்சு 2 நாட்களில் 8 கோடி செலவு – உடனடி விசாரணை கோருகிறார் அவைத்தலைவர்

– யாழ்.செய்தியாளர் –

வடக்கு மாகாண கல்வியமைச்சு 2 நாட்களில் 8 கோடி செலவு செய்தமை குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண பிரதி கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் .இது தொடர்பில் அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு மாகாணசபை ஆட்சி காலத்தில் இருந்தபோது மாகாண அமைச்சர்களுக்கு எதிராக அப்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் விசாரணைகுழு ஒன்றை அமைத்திருந்தார். அந்தகுழு பல மோசடிகள் இடம்பெற்றன என கண்டறிந்ததுடன் பல பரிந்துரைகளை வழங்கியது

அதில் மாகாண கல்வி அமைச்சு 2 நாட்களில் 8 கோடி ரூபாயை செலவழித்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவை எவ்வித தரவுகளும் இல்லாது முறைகேடாக செலவழிக்கப்பட்டுள்ளது . இதுதொடர்பில் தொடர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

எனினும் இன்று வரை இரு நாட்களில் பெருமளவான நிதிசெலவழிக்கப்பட்டமை தொடர்பில் தொடர்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை .எனவே காலம் தாழ்த்தாது தொடர்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடபிராந்திய கணக்காய்வாளர் நாயகத்துக்கும் வடக்குமாகாண ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.