இலங்கை

வடக்கில் ஒருலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – 13 வது திருத்தச் சட்டம் 6 மாத காலத்திற்குள் அமுல் – டக்ளஸ் உறுதி !

 

-யாழ் நிருபர்-

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ராஜபக்ச ஜனாதிபதியானால் வடக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்குவதுடன் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை ஆறு மாதத்திற்குள் முழுமையான அமுல்ப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தலில் நாம் அரசினை நம்பி வாக்களியுங்கள் என கோரவில்லை.ஈ.பி.டி.பி கட்சியாகிய எம்மை நம்பி வாக்களியுங்கள் என்றே மக்களை கோருகின்றேன்.ஏனெனில் இப்போதுள்ள தமிழ் தலைமைகள் போல நாம் அரசு ஏமாற்றி விட்டது,இந்தியா ஏமாற்றி விட்டது என கூக்குரல் போடமாட்டோம்.நாம் அவ்வாறு ஒரு நாளும் கூறியதில்லை.எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் சொன்னதையே செய்து வருகின்றோம்.அதனையே செய்வோம்.என்றார்.