உலகம்

வடகொரிய ஏவுகணை சோதனை; தென் கொரியாவும் கண்டனம்வடகொரியா அண்மையில் ஏவிய ஏவுகணை சோதனையானது ஒரு  இயந்திர சோதனை என  தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

தமது ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக வடகொரிய அரசு தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வடகொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ஏவுகணை இயந்திர சோதனை எனவும் இதன் மூலம் தடைசெய்யப்பட்ட நீண்ட தூர ஏவுகணையை ஏவும் சோதனைக்காக அந்த நாடு இதனை நடத்தியுள்ளதாகவும் தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தயைடுத்து வடகொரியா அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா எச்சரித்த நிலையில்,  தென் கொரியா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை ஜப்பானும் கடுமையாக எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.