உலகம்

வடகொரியா சென்ற முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்தித்துள்ளார்.

தென்கொரிய – வடகொரிய எல்லையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இருவரும் கைகொடுத்துக் கொண்டதன் பின்னர், வடகொரிய எல்லைக்குள் டொனால்ட் ட்ரம்ப் பிரவேசித்தார்.

அவ்வாறு வடகொரிய எல்லைக்குள் சென்ற முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாகவும் ட்ரம்ப் பதிவானார்.

இருவருக்கும் இடையில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த போதும், அவை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்துள்ளது.