உலகம்

வடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையில் இம்மாத இறுதியில் நேரடி சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிம் – மொஸ்கோ வரவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு நடக்கும் இடம் மற்றும் திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அமெரிக்காவுடனான வடகொரியாவின் பேச்சு ஸ்தம்பித்திருக்கும் நிலையில் இந்த ரஷ்ய சந்திப்புக்கு வடகொரியா தயாராகியுள்ளது இராஜதந்திரிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.