Breaking News

வசந்த யூ என் பியிலிருந்து தூக்கப்பட்டார் !

 

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவரது அமைச்சுப் பதவி விரைவில் பறிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வசந்த தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.