Breaking News

வகுப்புக்கு செல்வதாக கூறி சுற்றுலா சென்ற மாணவன் சடலமாக மீட்பு – நாவலப்பிட்டியில் பரிதாபம்

 

நாவலப்பிட்டி கலபொட ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

காதலியுடன் சுற்றுலா சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கிய நிலையில் இன்று காலை 10.30 அளவில் கடற்படையினரின் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிபொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கம்பளை போவல பகுதியை சேர்ந்த 18 வயதுடைய துஷார பிரதீப் என்ற உயர்தர மணவனே சடலமாக மீட்கப்பட்டார்

கம்பளை விக்ரபாகு வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் குறித்த இளைஞன் தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறி தனது காதலியோடு நாவலப்பிட்டி பகுதிக்கு சுற்றுலாவை மேற்கொண்ட போது குறித்த இளைஞனின் பாதணி ஆற்றில் விழுந்ததாகவும் பாதணியை எடுக்க முற்பட்டபோதே ஆற்றில் தவறி விழுந்ததாக குறித்த இளைஞனின் காதலியி தெரிவித்தாரென சொல்லப்படுகிறது

சடலத்தைநாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின் சட்ட வைத்திய பரிசோதணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

( நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  எம் கிருஸ்ணா )