உலகம்

வகுப்பறையில் தீ – 17 மாணவர்கள் பலி

இந்தியாவில் வகுப்பறை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்தபட்சம் 17 மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேற்கு நகரன சூரத்தில் உள்ள உயர்ந்த கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்து மாணவர்கள் குதித்து தப்பிக்க முயற்சித்த போது அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
20க்கும் அதிகமானர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மரணங்கள் தீ மற்றும் தப்ப முயற்சித்து கட்டிடங்களில் இருந்து குதித்தமை ஆகியவற்றால் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.