விளையாட்டு

லெபனானுடனும் தோல்வியை சந்தித்தது இலங்கைலெபனானுக்கு எதிரான கால்பந்தாட்ட உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில், இரு அணி வீரர்களும் மழையால் நனைந்த மைதானத்தில் சிரமத்திற்கு மத்தியில் விளையாடினர்.

எனினும் முதல் பாதியில் லெபனான் அணி 2 கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதியை விடவும்  அணி இரண்டாவது பாதியை சற்று சிறப்பாக ஆரம்பித்தது இலங்கை, எனினும் கோல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் லெபனான் அணியின், ஹிலால் அல்ஹெல்வே அபார கோல் ஒன்றை பெற்று லெபான் அணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தினார்.

இலங்கை அணி இந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

வெளிநாட்டில் 3 போட்டிகள் உட்பட இலங்கைக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.