உலகம்

லெபனானில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் தீவிரமான போராட்டங்கள் இன்று 10ஆவது நாளைக் கடந்துள்ளன.

லெபனானில் பொருளாதார நெருக்கடிகளும் ஊழலும் நிலவும் நிலையில்பிரதமர் சாத் அல் ஹரிரி 2020 ஆம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத்விவாதக் கூட்டத்தை மீளெடுத்ததைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகின.

இந்த நிலையில் தொடர்ந்து நாட்டில் வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துள்ள லெபனான் தலைவர், மிச்செல் அவுன், அரசாங்கத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் வலியூறுத்தினார்.

ஆயினும் லெபனானிய அரசாங்கத்தில் பங்கெடுக்கும் ஷியா முஸ்லிம் தரப்பான ஹெஸ்புல்லா அமைப்பு அரசாங்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதை எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.