உலகம்

லிபிய அகதி முகாம்களை மூட ஐ.நா உத்தரவு

லிபியாவில் உள்ள அகதிகளுக்கான அனைத்து தடுப்பு மையங்களையும் அகற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்த முகாம்கள் அகதிகளுக்கு பொருந்தாது என்று கூறியுள்ளது.

லிபிய தலைநகர் திரிப்போலியில் உள்ள முகாம் ஒன்றில் நடந்த விமானத் தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வறுமை மற்றும் மோதலில் இருந்து தப்பி படகுகளில் ஐரோப்பாவை செல்ல முயன்ற ஆப்பிரிக்கர்களாவர்.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் இந்த முகாம்கள் “மோசமானவை” என்று கூறியுள்ளது.

லிபியா முழுவதும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தடுப்பு மையங்களில் ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் மோசமான சூழ்நிலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.