உலகம்

லிபியாவில் ஏதிலிகள் படுகொலை – போர்க்குற்றம் என ஐ.நா தெரிவிப்பு

_107732872_libya_attack_640-nc.png
லிபிய தலைநகருக்கு வெளியே உள்ள தடுப்பு மையம் ஒன்றில் 44க்கும் மேற்பட்ட ஏதிலிகள் கொலை செய்யப்பட்டமை ஒரு போர்க்குற்றமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
குறித்த முகாம் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த உயிரிழப்புகள் பதிவாகின.
இந்த தாக்குதலில் குறைந்தது 130 பேர் காயமடைந்தனர்.
ஜெனரல் கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளே இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியதாக லிபிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் ஜெனரல் ஹப்தாரின் படைகள் அரசாங்க படையினரே செல்வீச்சு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களில் பெரும்பாலோர் லிபியாவிலிருந்து ஐரோப்பாவை அடைய முயன்ற சஹாரா ஆபிரிக்கர்கள் என்று நம்பப்படுகிறது.