உலகம்

லண்டனில் நிரவ் மோடி கைது

இந்திய வங்கியில் மோசடி செய்து, பிரிட்டனில் பதுங்கியிருந்த வைர வியாபாரி நிரவ் மோடியை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நெஷனல் வங்கி கிளையில், தன் உறவினர் மெஹுல் சோக்சியுடன் சேர்ந்து, 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி முறைகேடு வெளியில் தெரிந்ததும் இருவரும் வெளிநாடுக்கு தப்பியோடி விட்டனர்.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு எதிராக, லண்டனில் உள்ள, வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 18 ம் தேதி, பிடியாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து லண்டன் பொலிஸார் நிரவ் மோடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் நிரவ் மோடியை மார்ச் 29-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.