இலங்கை

லண்டனில் கைதான இலங்கையர்கள் விடுதலை !

லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் விசாரணைகளின் பின்னர் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

தகவல் ஒன்றுக்கமைய கைது செய்யப்பட்ட இவர்கள் பெட்போர்ட்ஷெயார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் அவர்கள் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன