இலங்கை

லண்டனில் கைதான இலங்கையர்களின்  மேலதிக விபரம் கொழும்பிடம் கோரப்பட்டது !

லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் மேலதிக தகவல்களை இலங்கை பாதுகாப்பமைச்சிடம் கோரியிருப்பதாக அறியமுடிகின்றது.
தகவல் ஒன்றுக்கமைய கைது செய்யப்பட்ட இவர்கள் பெட்போர்ட்ஷெயார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் அவர்கள் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணைகளை நடத்தும் பொலிஸார் அதற்கு தேவையான மேலதிக விபரங்களையே இலங்கையிடம் கோரியுள்ளனர் .