இலங்கை

லஞ்ச விவகாரத்தில் சிறைத்தண்டனையை எதிநோக்கிய அரசியல்வாதிக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு !

 

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 18 வருட கடூழிய சிறைவாசத்தை எதிநோக்கியிருந்த வரக்காபொல பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கப் பெற்றதையடுத்து அவரை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் விடுதலை செய்தார்.

வரக்காப்பொல பிரதேசத்தின் மூன்று வீதிகளை நிர்மாணிக்க ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது விதிக்கப்பட்ட மேல்நீதிமன்றத்தின் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில் அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் முன்னாள் தலைவருக்கு ஜனாதிபதி இந்த பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.

தெதிகம நெலும்தெனியாவை சேர்ந்த லக்ஷ்மன் பதிராஜாவே இவ்வாறு விடுதலை பெற்றுள்ளார்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.