விளையாட்டு

லசித் மலிங்க புதிய சாதனை

 

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் மொத்தமாக 50 விக்கட்டுகளை கைப்பற்றி, இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்க சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் ஜோ ரூட்டை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார்.

இதுவரையில் மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே உலகக் கிண்ண போட்டிகளில் 50 விக்கட்டுகளை கடந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் க்ளன் மெக்ராத் (71 விக்கட்டுகள்) இலங்கையின் முத்தைய்யா முரளிதரன் (68 விக்கட்டுகள்) பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (55விக்கட்டுகள்) ஆகிய முன்னாள் கிரிக்கட் வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்திருக்கின்றனர்.