Breaking News

றிஷார்ட் தற்கொலை குண்டுதாரி அல்ல – ஹாரீஸ்

 

சின்ன குழு செய்த தவறுக்காக முஸ்லிம் இனத்தையே தண்டிக்கவேண்டாமென இராஜாங்க அமைச்சர் ஹாரீஸ் இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் றிஷார்ட்டுடன் எமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவருக்கு எதிராக வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தும்போது எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அவரை தற்கொலை குண்டுதாரி என்று விமல் வீரவன்ச கூறுகிறார்.அதனை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த உயரிய சபையின் ஒரு பிரதிநிதியை அப்படிக் கூறுவதா? அது சரிதானா?இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்து அவர்களை அழிக்க உதவியவர்கள் எமது மக்கள். அதனால் தான் இன்று சாய்ந்தமருதுக்கே ஜனாதிபதி சென்று நன்றி கூறுகிறார். இந்த தாக்குதல் பாதிப்பை நாங்கள் உணர்ந்து கவலைகொள்கிறோம்.இதை இந்த நாட்டில் வாழும் எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

இவ்வாறு குறிப்பிட்டார் ஹாரீஸ் .