இலங்கை

றிசாட்டுக்கு எதிராக செப்பு கைத்தொழிலாளர்கள் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக செப்பு கைத்தொழிலாளர்கள் இன்று முறைப்பாட்டை பதிவு செய்யவுள்ளனர்.

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் அவர்கள் முறைப்பாட்டை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைத்தொழில்துறை அமைச்சராக இருந்த போது குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றுக்கு மாத்திரம் றிசாட் அதிகளவான செப்பினை விநியோகித்திருப்பதாகவும், இதன்மூலம் தங்களது தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.