உலகம்

ரோஹிங்யா முஸ்லிம்களை படுகொலை செய்த படையினர் முன்கூட்டியே விடுவிப்பு

மியன்மாரில் 10 ரோஹிங்யா முஸ்லிம்களை படுகொலை செய்தமைக்காக சிறையில் வைக்கப்பட்டிருந்த படைத்தரப்பினர் ஏழுபேர், உரிய காலத்துக்கு முன்னதாகவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2018ம் ஆண்டு குறித்த ஏழு பேருக்கும் 10 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் கடந்த வருடம் நவம்பர் மாதமே விடுவிக்கப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017ம் ஆண்டு மேற்கு ரக்கின் பிராந்தியத்தில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளில், குறித்த 7 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.