விளையாட்டு

ரொஸ் டெய்ரல் புதிய சாதனைஅனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்ற முதலாவது வீரர் என்ற பெருமையை நியுசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ரொஸ் டெய்லர் படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் ஊடாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

35 வயதா ரொஸ் டெய்லர் இதுவரை, 231 ஒருநாள் போட்டிகளிலும், 100 இருபதுக்கு-20 போட்டிகளிலும் பங்கேற்றிருந்த நிலையில், இன்றைய தினம் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றார்.

இதன் மூலம் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்ற முதலாவது  மற்றும் ஒரேயொரு (இன்றைய திகதியில்) வீரர் என்ற சாதனையை டெய்லர் படைத்துள்ளார்.

ரொஸ் டெய்லர் இதுவரை, 99 (100) டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் அடங்கலாக 7,174 ஓட்டங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 21 சதங்கள் அடங்கலாக 8,570 ஓட்டங்களையும், இருபதுக்கு-20  போட்டிகளில் 7 அரைச் சதங்கள் அடங்கலாக 1,909 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.