Breaking News

ரூபவாஹினி விவகாரம் – ஜனாதிபதிக்கு கண்டனக் கடிதம் அனுப்பினார் இராஜாங்க அமைச்சர் ருவன் !

 

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கு அதிருப்தி தெரிவித்து ஜனாதிபதி மைத்ரிக்கு கண்டனக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார் ஊடக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன.

ஊடக இராஜாங்க அமைச்சரான தனக்கு தெரியாமல் இப்படி செய்யப்பட்டமை சரிதானா என்று அதில் கேள்வியெழுப்பியுள்ள அமைச்சர் ருவன் , தேசிய பாதுகாப்பு , அமைதி , நல்லிணக்கம் போன்ற காரணங்களுக்காக ரூபவாஹினி இப்படி பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாக வர்த்தமானியில் சொல்லப்பட்டாலும் அவற்றில் ஜனாதிபதியின் கடந்தகால பங்களிப்பு என்னவென்றும் வினவியுள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் இப்படியொரு செயற்பாடு நடந்ததில்லையென்றும் இது ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பான ஒன்றென்றும் அவர் அந்தக் கடிதத்தில் சாடியுள்ளார்.