இலங்கை

ரூபவாஹினி தலைவர் நியமன விவகாரம் – மைத்ரி -ரணிலுக்கிடையே புதிய மோதல் !

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவரை பதவியில் இருந்து அகற்றும் விவகாரத்தால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

புதிய தலைவர் ஒருவரை ரூபவாஹினிக்கு நியமிக்க ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதமர் ரணிலின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அந்த நியமனங்களை நிராகரித்திருந்த ஜனாதிபதி இப்போதைய தலைவர் பதவியில் தொடர வேண்டுமென பணித்திருந்தார்.

இந்நிலையில் புதிய நியமனம் குறித்து பேச்சு நடத்த வருமாறு பிரதமர் ரணில் இப்போதைய தலைவரை இன்று அழைத்திருந்தார்.ஆனால் அந்த சந்திப்புக்கு செல்லத் தேவையில்லையென ரூபவாஹினி தலைவருக்கு ஜனாதிபதி தரப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதேசமயம் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தனவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்ரி – தமது நியமனங்களில் எந்த மாற்றங்களையும் செய்ய முயலக் கூடாதென தெரிவித்துள்ளார்.