இலங்கை

ரிஷார்ட் பதவி விலகத் தேவையில்லை – கட்சி உறுப்பினர்களிடம் சொன்னார் ரணில்

 

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டதாக அறியமுடிந்தது.

நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் – நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் றிஷார்த்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் தற்காலிகமாக பதவியில் இருந்து விலகினால் இப்போதைய பிரச்சினைகளை சமாளிக்கலாமெனவும் ,ரவி கருணாநாயக்க,திலக் மாரப்பன ஆகியோர் முன்னர் இராஜினாமா செய்தது போல ரிஷார்த்தும் செய்ய வேண்டுமென தீர்மானித்தனர்.

இந்தக் கோரிக்கை பின்னர் பிரதமர் ரணிலிடம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை உடனடியாக நிராகரித்தார் ரணில் .” தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலோ அல்லது வேறு எந்த குற்றங்களோ ரிஷார்ட் மீது முன்வைக்கப்படாத நிலையில் அவர் பதவி விலகத் தேவையில்லை ” என்று ரணில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.