Breaking News

ரிஷார்ட்டுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை – சபாநாயகருக்கு அறிவித்தார் பதில் பொலிஸ் மா அதிபர் !

 

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தீவிரவாத செயற்பாடுகள் எதிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையென பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை பதில் பொலிஸ் மா அதிபர் கையளித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு நடத்திய விசாரணைகளில் – ரிசார்ட் மீதான இதர குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தபோதிலும் அவருக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக எவரும் சாட்சியங்களை முன்வைக்கவோ – முறைப்பாடு செய்யவோ இல்லையென்று பதில் பொலிஸ் மா சபாநாயகரிடம் மேலும் கூறியிருப்பதாக அறியமுடிந்தது.