உலகம்

ரியுனீசிய கடலில் அகதிகள் படகு விபத்து – பலர் பலி

மத்திய தரைக்கடலின் ரியுனீசிய கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியுள்ளது.

இதில் குறைந்த பட்சம் 50 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகளுக்கான சர்வதேச ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் 70 அகதிகள் உயிரிழந்துவிட்டதாக டியூனீசியாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டியூனீசியாவின் தலைநகர் டியூனிஸில் இருந்து 74 கிலோமீற்றர் தெற்காக உள்ள கடற்பரப்பில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகானது, லிபியாவின் சுவாரா நகரில் இருந்து அகதிகளை ஏற்றி வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.