Breaking News

ரிசார்ட் எம் பியின் சகோதரர் கைது !

முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் றிப்கான் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்படவுள்ளார்.