விளையாட்டு

ராணுவ வீரர்களுக்கான தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியினர்

காஷ்மீரில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து இந்திய கிரிகெட் வீரர்கள் விளையாடினர்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் ராணுவ வீரர்களுக்கான தொப்பியை அணிந்து விளையாடினர்.

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ வீரர்களுக்கான தொப்பி அணிந்து அவர்கள் விளையாடினர். மேலும், 3வது ஒருநாள் போட்டிக்கான சம்பளத்தையும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குகின்றனர்.