இலங்கை

ராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.