உலகம்

ராகுல் மீது துப்பாக்கி குறிவைக்கப்படவில்லை – இந்திய உள்துறை அமைச்சு விளக்கம் !

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவருடைய கண்ணுக்கு அருகாமையில் பச்சை நிறத்திலான ஒளி தொடர்ந்தது.

இது துப்பாக்கியால் சுட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கலாம் என குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் மேலிடம், இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி ராகுலுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சு இது தொடா்பாக விளக்கம் அளித்துள்ளது.

ராகுல் காந்தி பிரசார மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் தொண்டர் ஒருவா் செல்போனில் தொடா்ந்து வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தாா். அந்த செல்போனில் இருந்து வந்த ஒளி தான் ராகுலின் மீது விழுந்துள்ளது. ராகுலுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. ராகுலின் உயிருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று அம்மைச்சின் செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.