உலகம்

ரஷ்ய நீர்மூழ்கி கப்பலில் அதிக கதிர்வீச்சு- நோர்வே தகவல்

 

1989 ல் நோர்வே கடலில் மூழ்கிய ரஷ்ய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளிலிருந்து இயல்பை விட 800,000 மடங்கு அதிகமான கதிர்வீச்சு அளவை நோர்வே கண்டறிந்துள்ளது.

அதன் காற்றோட்ட குழாயிலிருந்து கதிரியக்கம் கசிந்ததை அதன் மாதிரி காட்டியது.

ஆனால் ஆர்க்டிக் நீர் விரைவாக அதை நீர்த்துப்போகச் செய்வதால் இது “ஆபத்தானது அல்ல” என்று ஆராய்ச்சியாளர் ஹில்டே எலிஸ் ஹெல்டால் கூறினார்.

சோவியத் கால துணை நீர்மூழ்கியானது கடலில் 1,680 மீ (5,512 அடி) ஆழத்தில் உள்ளது.

இப்பகுதியில் சில மீன்கள் உள்ளன, என்று அவர் கூறினார்.

இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

கொம்சோமொலெட் என்ற இந்த கப்பலை முதல் முறையாக நோர்வே ரிமோட் ஆய்வு கருவி துணையுடன் (ROV) ஜூலை 7 அன்று ஆய்வு செய்து படமாக்கியது.

இது ரஷ்யாவில் கே -278 என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இது இரண்டு அணு முனைகள் கொண்ட டார்பிடோக்களை சுமந்தபடி மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.