உலகம்

ரஷ்ய குண்டு தொழிற்சாலையில் குண்டுவெடிப்பு

ரஷ்யாவின் செர்சின்ஸ்க் நகரில் உள்ள வெடிகுண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் 38 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக அழிவடைந்துள்ளது.
சம்பவம் இடம்பெறும் போது 5 பேர் தொழிற்சாலைக்குள் இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பு இடம்பெற்றமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.