உலகம்

ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தத்தை பாதுகாக்க கோரும் நேட்டோ

 

ரஷ்யாவுடனான முக்கிய ஏவுகணை ஒப்பந்தத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய தருணத்தில் இருப்பதாக, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஒகஸ்ட் 2ம் திகதி வரையான காலக்கெடுவிற்குள் ரஷ்யா இந்த ஒப்பந்தத்துடன் இணங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

‘அதிகமான ரஷ்ய ஏவுகணைகளுடன் கூடிய ஒரு உலகத்திற்கு தயாராக இருக்க வேண்டும்’ என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சோவித் ரஷ்யாவிற்கு இடையில் 1987ல் கைச்சாத்தான ஒப்பந்தம் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை தடை செய்தது.

ரஷ்யா தமது விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி, பெப்ரவரி மாதம் இடைநிலை அணுசக்தி படைகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா அதில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட்; ட்ரம்ப் அறிவித்தார்.

ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும், பின்னர் அதுவும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது.