உலகம்

ரஷ்யா – உக்ரேய்ன் மீண்டும் முறுகல்

 

ரஷ்யாவிடமிருந்து இந்தவார ஆரம்பத்தில் மீண்டும் கையளிக்கபட்ட 3 கடற்படை படகுகளில் இருந்த ஆயுதங்களும் கழிவறைகளும் அகற்றப்பட்டுள்ளதாக உக்ரேய்ன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால் இந்தக்குற்றசாட்டை மறுத்துள்ள ரஷ்யா குறித்த 3 படகுகளும் வழமையான நிலையில் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்தவருடம் கிறிமியன் குடாக்கடலில் வைத்து உக்ரெயின் கடற்படைக்கு சொந்தமான இரண்டு பீரங்கிப் படகுகளையும் ஒரு இழுவை படகையும் ரஷ்ய கடற்படை கைப்பற்றியது.

இந்த நடவடிக்கை காரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான முறுகல் தீவிரமடைந்தpருந்தது.

எனினும் இரண்டு தரப்பும் இணக்கப்பாடு கண்ட ஒரு நீர்ப்பகுதியில் வைத்து ரஷ்யா படகுகளை விடுவித்தpருந்தது. .

படகுகளில் இருந்த 24 உக்ரேனிய மாலுமிகள் செப்டெம்பர் மாதம் மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பின்னர் திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மெதுவாக மேம்படுத்துமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரெயினின் குற்றச்சாட்டு மீண்டும் முறுகலை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.