உலகம்

ரஷ்யாவில் மது  பழக்கம் 43 வீதத்தால் குறைவடைவுரஷ்யாவில் மது அருந்தும் பழக்கம் 43 வீதத்தால் குறைவடைந்தமை குறித்த உலக சுகாதார அமைப்பு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளில் அதிகமாக மது அருந்தும் குடிப்பரம்பல் உள்ள நாடாக முன்னர் கருதப்பட்ட ரஷ்யா ‘வொட்கா’ போன்ற மனு வகைகளுக்கும் மதுவுக்கு பெயர் போன நாடாகவும் இருந்தது.

எனினும், அண்மைக்காலமாக அங்கு மது அருந்தும் பழக்கம் 43 வீதத்தால்  குறைந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்துக்கு ரஷ்யா அரசாஙகம் முன்னெடுத்த மது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த கரிசனைகளே காரணம் என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

மதுப் பழக்கம் குறைவடைந்ததையடுத்து சராசரி ரஷ்யர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிமிட்ரி மெத்வெடேவ் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மது தொடர்பான மதுவுக்கு கூடுதலான வரி விதிக்கப்பட்துடன் மது தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது .