உலகம்

ரஷ்யாவில் தீ விபத்து; 14 பேர் பலி

ரஷ்யாவில் செவரோமொஸ்கில் உள்ள கடற்படையினரின் பரிசோதனைக் கூடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

அங்குள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு மையம் ஒன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரியல் இரசாயன பொருட்களை வெளியேற்றி கொண்டிருக்கும் போது இடம்பெற்ற விபத்தினால் இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீப்பரவலின் பின்னர் அங்கு பரவிய விஷவாயு தாக்கி படையினர் 14 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்